இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி விடுவார்கள்- அமைச்சர் நிர்மல்குமார்
Aug 23, 2026, 09:11 IST1787456480315
தீய சக்தியான திமுகவை முதலமைச்சர் விஜய் முற்றிலுமாக ஒழித்து விட்டார் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தீய சக்தியான திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்து விட்டார். இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி விடுவார்கள். அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும். முரசொலி டிரஸ்ட்க்காக தான் இவ்ளோ போட்டியும்.. முரசொலி டிரஸ்ட்டை எந்த குடும்பம் கைப்பற்ற போகிறது என்பதில்தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தீயசக்தி தி.மு.கவை ஒழிக்கணும்னு எம்.ஜி.ஆர் சொன்னாரு, தளபதி செஞ்சே முடிச்சிட்டாரு” என்றார்.

