“உதயநிதி பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்” - நிர்மல்குமார்
உதயநிதி பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். திமுகவினர் என்றாலே ஆபாசம் தான் என அமைச்சர் நிர்மல்குமார் ஆவேசமாக கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “விரக்தியின் உச்சத்தில் பகலிலேயே நிதானமின்றி உதயநிதி பேசுகிறார். தொடர்ந்து ஆபாசமாக பேசி வரும் உதயநிதியால் திமுகவிற்கு நிச்சயம் எதிர்காலம் இல்லை. பொதுவெளியில் திமுகவினர் ஆபாசமாக பேசி வருகின்றனர். அந்த குடும்பத்திற்கு எதை பற்றியும், யாரை பற்றியும் கவலையில்லை, அவர்களுக்கு தேவை பணம், அதிகாரம். திமுகவில் பெண்கள் யாரும் போய் சேர்வார்களா? உதயநிதி பொது வாழ்க்கைக்கே தகுதி இல்லாதவர். உதயநிதியை மாற்ற முடியாது. அவரை பற்றி பேசுவதையே நாம் தவிர்த்துவிட வேண்டும்.
திமுக நன்றாக ஆட்சி செய்ததாக இபிஎஸ் திமுகவுக்கு முட்டுக்கொடுத்து பேசுகிறார். இபிஎஸ் இதுபோன்று செயல்படுவதால் தான் பலர் கட்சியைவிட்டு ஒதுங்குகின்றனர். வீரமணி வழக்கை மு.க ஸ்டாலின் யாருக்காக மூடி மறைக்க பார்த்தார்?.. எடப்பாடி பழனிசாமி இதற்கு மேல் அந்த கட்சியில் இருக்க வேண்டிய நபரே கிடையாது ராஜினாமா செய்து விட்டு போகலாம். சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் ஒரு சில வழக்குகளுக்கு மட்டும் ஆர்டிஐயில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ மூலம் பெறும் தகவலில் அனைத்துக்கும் விலக்கு கொடுக்கவில்லை. சாதி மோதல்கள் குறித்த சட்டம், ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

