"திமுக ஆட்சியில் 5,000 பள்ளிகளில் வசூல்; ஸ்டாலின் அரசியலை விட்டு விலகட்டும்"- நிர்மல்குமார்

 
"திமுக ஆட்சியில் 5,000 பள்ளிகளில் வசூல்; ஸ்டாலின் அரசியலை விட்டு விலகட்டும்"- நிர்மல்குமார்

திமுக ஆட்சியில் 5,000 பள்ளிகளில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைசசர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிரமல்குமார், "ஜெம் வீரமணி வழக்கில் கட்டபபஞ்சாயத்து நடத்தி திமுக சம்பாதித்தது. ஸ்டாலினுக்கு தெரியாமல் யாரும் பணம் வாங்கி இருக்க மாட்டார்கள்.  முதல்வருக்கான எந்த அருகதையும் இல்லாதவர்.  கே.என்.நேரு தம்பி கொலையாளிகளை கூட தி.மு.க ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் சிறுமி காணாமல் போன விஷயத்தையே மூடி மறைத்திருப்பார்கள். செஞ்சி அருகே மாயமான சிறுமியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். எல்லாக் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. 

இந்தியா முழுவதும் 40,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின்பற்றாக்குறை உள்ளது.. மின்பற்றாக்குறை குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கவில்லை. குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்திலேயே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் மற்றவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும், பள்ளியில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கேவலமான கும்பல்.. தி.மு.கவிற்கு பேசுவதற்கு அருகதையே கிடையாது. திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும்.. தவெக ஆட்சியில் தவறு நடந்தால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை நாங்கள் வசூல் செய்வோம் என சான்றிதழ் வழங்க 4,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புரோக்கரை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்ததால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள்" என்றார்.