வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தோமா? ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்- நிர்மல்குமார்

 
ச்

தி.மு.கவின் ஸ்கிரிப்டை எடுத்து வந்து சண்முகம் பேச வேண்டாம். வாக்காளர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்,  “பெ. சண்முகம் அவர்கள் திமுக சொல்கின்ற ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு பேச வேண்டாம். எங்காவது தவெக பணம் கொடுத்ததாக ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எங்களுடைய தலைவர் கடந்த நான்கு மாதங்களில் செய்த நல்ல பணிகளே எங்களுக்கு 100 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தரும். களத்தில் உள்ள உங்கள் தொண்டர்களிடம் உண்மையான தகவல்களைச் சேகரித்துவிட்டு பேச வேண்டும். நீங்கள் பேசுவதை திமுக பலமாக நினைக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் தங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவெளியில் பெண்களை பற்றி அவதூறாக பேசுகிறார்கள்.. ஒரு நாள் அப்பா.. மறுநாள் மகன்.. எப்படி திமுக-வை நம்பி திமுக கட்சியில் பெண்கள் இருக்கிறார்கள்? அண்ணன் சண்முகம் அவர்களுக்கு திரும்பவும் சொல்கிறோம். திமுக கூறுவதை வைத்து பேச வேண்டாம். 

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவ கேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவின் கடைசி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் இந்த வயதிலும் இவ்வளவு மோசமாக ஒரு பட்டியலினப் பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசியிருக்கிறார். திமுக-வினர் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர்கள். எனவே தான் அவர்களை தீய சக்தி திமுக என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறோம். அவர்கள் சமுதாயத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள். சமூகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டிய கட்சி திமுக. மு.க.ஸ்டாலினின் உண்மையான முகம் நேற்று வெளிவந்துவிட்டது. விரக்தியின் உச்சத்தில் தன்னிலை மறந்து பேசி உள்ளார்; திமுகவினர் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர்கள். இனி அவர்களுக்கு தோல்வி மட்டும்தான், வெற்றியே கிடையாது” என்றார்.