“கருணாநிதி செய்த தவறு... மேகதாது அணை விவகாரத்தில் மாநில அரசால் எதுவும் செய்ய முடியாது”- நிர்மல்குமார்
மின்சார துறையில் கட்டண உயர்வு என தவறான தகவலை திமுக தலைவர் பரப்புகிறார்.. எங்களை தொடர்பு கொண்டால் விளக்கம் கொடுக்க தயார் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “கர்நாடகாவில் எந்த அரசு இருந்தாலும் அவர்களோட ஒரே குறிக்கோள் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பது தான்... கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆட்சி செய்தாலும் நீர் தரக்கூடாது என நினைக்கின்றனர். மாநிலங்கள் இதில் எதுவும் செய்ய முடியாது ஒன்றிய அரசு தான் செய்ய முடியும்... காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இருக்கும் ஒரே தீர்வு உச்சநீதிமன்றம் மட்டுமே. ராகுல்காந்தி சொன்னா தண்ணி வந்துரும்னு சொல்ற அன்புமணி, காங்கிரசோடு கூட்டணியில் இருந்தபோது என்ன பண்ணிட்டு இருந்தாரு..? -
வாட்ஸ்ஆப்பில வர மெசேஜ் வெச்சிட்டு தவறான தகவலை பரப்புகிறார். மு.க.ஸ்டாலினுக்கு தெளிவு வேணும்.. CM ஆக இருக்கும்போது தெளிவு இல்லாமல் யாரோ சொல்வதை கேட்டு கையெழுத்து போட்டு ஸ்டாலின் செயல்பட்டுட்டு இருந்தாரு.. மின்சார துறையில் கட்டண உயர்வு என தவறான தகவலை திமுக தலைவர் பரப்புகிறார்.. எங்களை தொடர்பு கொண்டால் விளக்கம் கொடுக்க தயார். ஆய்வில் 50 புகார் மட்டுமே மின் நுகர்வு கட்டணம் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. மாதாந்திர மின் கணக்கீட்டிற்கு புதிய பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர். டிஜிட்டர் மீட்டர் பொருத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் 543 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். மேகதாது விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த தவறு தான் இப்போது வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதில் பல ஆண்டுகளாக கர்நாடகா தெளிவாக உள்ளது” என்றார்.

