”Party Fund -னு பேசுனதுதான் ஊர்ல ஒரு ஆள் இல்ல, செந்தில் பாலாஜிலாம் எங்க இருக்காருனே தெரியல”- நிர்மல்குமார்
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சும்மா விட மாட்டோம் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சும்மா விட மாட்டோம். மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நின்றே தீர வேண்டும். நீதி வெல்லும். தன்னை சாதாரண வியாபாரி என்று கூறிக் கொள்ளும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எப்படி இத்தனை குவாரி? எப்படி இத்தனை கோடி சொத்து? அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனால் தூத்துக்குடியில் ரௌடியிசம் பெருகிவிட்டது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் முறைகேடாக செயல்படும் கல்குவாரிகள் விரைவில் மூடப்படும். தூத்துக்குடியின் இந்த நிலைமைக்கு அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும்தான் காரணம்.
Party Fund -னு பேசுனதுதான் இன்னைக்கு ஊர்ல ஒரு ஆள் இல்ல,, செந்தில் பாலாஜிலாம் எங்க இருக்காருனே தெரியல.. ஓடி ஒளிந்து, தலைமறைவாக வேண்டிய நிலை செந்தில்பாலாஜிக்குத் தேவைதானா? எதற்காக மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும், எதற்காக தெரு தெருவாக ஓடி ஒளிய வேண்டும்? உள்ளாட்சி தேர்தல்களிலும் மக்கள் நமக்கு இதே போல் அங்கிகாரம் வழங்குவார்கள்” என்றார்.

