“காவிரியை கர்நாடகத்திற்காக கருணாநிதி குடும்பத்தினர் விட்டுக் கொடுத்தனர்” - அமைச்சர் நிர்மல்குமார்

 
“காவிரியை கர்நாடகத்திற்காக கருணாநிதி குடும்பத்தினர் விட்டுக் கொடுத்தனர்” - அமைச்சர் நிர்மல்குமார்

காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் என முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தெரிந்து கொண்டு பேசுமாறு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், “காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக துரோகம் செய்துள்ளது. காவிரியை கர்நாடகத்திற்காக கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர் விட்டுக் கொடுத்தனர். பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கருணாநிதி குடும்பத்தினருக்கு சொத்துகள் உள்ளன. தன்னுடைய சொத்துக்களை காப்பாற்ற தமிழக உரிமைகளை அடகு வைத்தவர் மறைந்த கருணாநிதி. கரூர் சம்பவம் நடந்து எப்படி ஐந்து நிமிடத்திற்குள் கேமராவோடு செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றார்? பக்கத்திலே காத்துக்கொண்டு இருந்தாரா? எங்களுக்கே 8.10 மணிக்கு தான் மரணம் குறித்து தெரியும். ஆனால் செந்தில்பாலாஜி எப்படி 8.5 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றார்? எங்களுக்கும் எஸ்பிக்கும் தெரியாத விஷயம் செந்தில்பாலாஜிக்கு மட்டும் எப்படி தெரியும்” என்றார்.