“அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற கேவலமான நபரை தவெகவில் சேர்க்க மாட்டோம்”- நிர்மல் குமார்

 
ச்

முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

ச்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு அவர் மீது வழக்குப் போடாமல் இருக்கமுடியாது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யட்டுள்ளார். திசை திருப்புவதாக நினைத்து தவெகவில் இணையுமாறு மிரட்டியதாக பேசிவருகிறார்.அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற கேவலமான நபரை தவெகவில் சேர்க்க மாட்டோம். அவரைப் போன்ற ரவுடிகளை, தவமிருந்தாலும் தவெகவில் சேர்க்க மாட்டோம். முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை சேர்க்க மாட்டோம். முன்ஜாமீன் ரத்தானதால் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது உடையில் சிறுநீர் கழித்த நபரை எல்லாம் பார்த்திருக்கிறோம். அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற நபர்களால் தான் தென் தமிழகத்தில் அமைதி போய் விட்டது. மு.க.ஸ்டாலின், உதயநிதி சொல்லித்தான் செந்தில் பாலாஜி குதிரை பேரத்தில் ஈடுபட்டார் தவெகவில் இணைந்தவர்கள் மீது வழக்குகள் இருந்தாலும் அது தொடர்பான விசாரணை தொடரும். மாற்றுக்கட்சியில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் இல்லை. இங்கு எதிலும் ஊழல் கிடையாது. எங்கேயும் ஊழல் கிடையாது. தவறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும். யார் ஊழல் செய்திருந்தாலும் வழக்கு பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.