"திமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வர்"- அமைச்சர் நிர்மல்குமார்

 
“விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார்

திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க தற்போது வரை முயற்சி செய்கின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல... அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்... கர்நாடகாவில் தொழில்கள் மட்டுமே செய்கிறார்.. திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க தற்போது வரை முயற்சி செய்கின்றனர். திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயல்வதற்கு திமுக எம்எல்ஏக்களே உடன்படவில்லை. திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மு.க. ஸ்டாலின், உதயநிதி குதிரை பேரத்தில் ஈடுபடுவதால் கூட்டணிக் கட்சியினர் வெளியேறுகின்றனர். மதிமுக எம்எல்ஏக்களை அவர்களின் கட்சிக் கூட்டத்துக்கு கூட போகவிடாமல் தடுத்தது யார்?இஸ்லமியருக்கு எதிரான மதுரை அமர்வின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும். மதம் மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கும் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்