முதல்வரின் கைபாவனை எந்த தனி நபரை குறிப்பிடவில்லை - அமைச்சர் நிர்மல் குமார்

 
முதல்வரின் கைபாவனை எந்த தனி நபரை குறிப்பிடவில்லை - அமைச்சர் நிர்மல் குமார்

அன்று எம்.ஜி.ஆர் பேசுவதை கேலி செய்தனர், இன்று முதல்வர் விஜயை சொல்லுகிறார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “முன்பெல்லாம் தலைமை செயலகத்திற்கு வருவது புரோக்கர்கள் மட்டும் தான்.. வசூல் பண்றதுக்காகவே நீங்க வந்தீங்க... ஆனா., இப்போ சாமானிய மக்கள் மட்டும் தான் வராங்க.. இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர் பேசுனத அன்னைக்கு கிண்டல் செஞ்சாங்க.. அதே டெக்னிக்க தான் இப்பவும் ஃபாலோவ் பண்றாங்க. சட்டப்பேரவையில் பிரளயத்தை ஏற்படுத்திய "Party Fund" என்ற வார்த்தை. கட்சிநிதி குறித்து முதலமைச்சர் பேச தொடங்கியவுடன் திமுகவினருக்கு ஏன் பயம்? முன்னாள் நிதியமைச்சர் தொடர்புடைய ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோவை சுட்டிக்காட்டி அது கட்சி நிதி இல்லையா?  கட்சி நிதி பற்றி பேசியதும் திருடனுக்கு தேள் கொட்டியதை போல் பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர். மின்துறை வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படும். 

செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீடு நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதிக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் திமுக. வேறு ஏதும் உத்தரவாதம் அளித்திருப்பதற்காக இருக்கலாம். சட்டசபையில் திமுகவினர் எவ்வளவு கேவலமாக நடந்து இருக்கிறார்கள் என்பது வரலாறு அறியும். எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நாங்கள் நேரம் கேட்டோம். ஆனால் அப்போது சந்தித்தால் நல்லா இருக்காது என அவர்கள் தெரிவித்துவிட்டனர்” என்றார்.