வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர் - மின்வெட்டுக்கான காரணம் குறித்து அமைச்சர் பகீர் விளக்கம்

 
வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர் - மின்வெட்டுக்கான காரணம் குறித்து அமைச்சர் பகீர் விளக்கம்

இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு சுமார் 40 நிமிடங்களில் சரி செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “வரும் உள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். மின்வாரியத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய குழு அமைத்துள்ளோம். சில இடங்களில் வேண்டுமென்றே ஃபியூசை எடுத்து செல்கின்றனர். இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு சுமார் 40 நிமிடங்களில் சரி செய்யப்படுகிறது. மின் துறையில் விரைவில் 15,000 பேருக்கு வேலை வழங்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். மின் துறையில் பதவி உயர்வு தாமதமின்றி வழங்கப்படும். பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும். இதுமாதிரி பதவி உயர்வு 45 வருடங்களில் நடந்தது இல்லை. அமைச்சராகி ஒரு மாதம் ஆன நிலையில், இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. இது 100% மக்களுக்கான அரசு. கொஞ்சநாள் விட்டிருந்தால் மின் துறையில் தனியார் மயமாகி இருக்கும். மிக சவாலான துறை இது. பதவியேற்கும்போது ரூ.1.5 லட்சம் கோடி மின் துறை கடன் என நினைத்தேன். ஆனால் ரூ.2.5 லட்சம் கோடியாக கடன் உள்ளது” என்றார்.