“தேர்தலுக்கு முன் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” - அமைச்சர் நிர்மல்குமார்

 
”கரூர் துயரத்திற்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்று உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டே நயினார் நாகேந்திரன் சொல்கிறார்”- நிர்மல் குமார்

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்  விளக்கம் | #NirmalKumar | #TVK‌ |

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “எனக்கு மின்சாரத்துறையும் சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் அவர்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இந்த முக்கியமான துறையை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரத்துறையை இதற்கு முன் இருந்த அரசுகள் அனைத்தும் கெடுத்து குட்டிச்சுவராக்கி உள்ளார்கள். 2006ல் தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையின் அழிவுகாலம் ஆரம்பித்தது. 2001 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,45,000 பேர் பணிபுரிந்த இத்துறையில் தற்போது வேலைவாய்ப்பு பாதியாக குறைந்துள்ளது. மொத்த கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி அளவிற்கு மின்சாரத்துறையில் கடன் உள்ளது. இது அனைத்தையும் சீரமைக்கும் மிகப்பெரிய பணியினை தலைவர் அவர்கள் என்னிடத்தில் ஒப்படைத்துள்ளார். மின் உற்பத்தியில் மாநிலத்தினை தற்சார்ப்பு மாநிலமாக கொண்டு செல்ல வேண்டும். தற்போது வெளியில் இருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவை குறைத்து. நமது மாநிலத்தில் உள்ள வாய்ப்புகளை வைத்து மின் உற்பத்தியில் தற்சார்பு பெற்ற மாநிலமாக இதை கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அடிப்படை கட்டமைப்பின் மூலம் அனைத்து ஊர்களுக்கும் மின்சாரத்தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தலுக்கு முன்னதாக கூறிய அனைத்து வாக்குறுதிகளும் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தற்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதவி ஏற்பின் கூறியதைப் போல முழுவதுமாக துறைகள் ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டும் என தெரிவித்தார்கள். அந்த ஆய்வினை எங்கள் துறையில் முடித்த பின்புதான், எங்கள் துறையில் என்ன செய்ய வேண்டும். தற்போது அனைத்து துறைகளையும் தணிக்கை செய்து, அதில் முக்கியத்துவம் வாய்ந்தவை, எது முதலில் செய்ய வேண்டும் என்பதை ஆராயந்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும். அனைவரும் வெளியில் இருந்து தெரிந்தது ஒரு லட்சம் கோடி கடன் உள்ளது, நிலக்கரி கொள்முதல் சரியாக இல்லை. இதுமட்டுமல்லாது ஒரு யூனிட் மின்சாரம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. 44,000 டிரான்ஸ்பார்மர் ஊழலும் கையில் உள்ளது. இது ஏற்கனவே சி.பி.ஐ.வசம் உள்ளது. இது போன்று குறையுடன் உள்ள ஒரு துறையை சீரமைக்க மிகப்பெரிய அளவில் சிரமத்துடன் முயற்சி மேற்கொள்ள வேண்டி உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இந்த துறையை கொடுத்துள்ளார்கள். 100 சதவீதம் நிவர்த்தி செய்யும் அளவிற்கு பணியினை மேற்கொள்வோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு துறையினை ஆய்வு செய்து தேவைக்கேற்ப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அமைச்சரவை விரிவாக்கம் எப்போது தேவையோ அப்போது முதலமைச்சர் அவர்கள் அதற்கான நடவடிக்கையினை எடுப்பார்கள்” என்றார்.