அமைச்சர் நிர்மல் குமார் பேசியதும் கொந்தளித்த எதிர்க்கட்சிகள்..!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒருமனதாக சேர்ந்து, தீர்மானம் நிறைவேற்றினோம். எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட என்ன பயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 3 வருடமாக யாரைப் பார்த்தும் பயப்படாதவர் எங்கள் முதலமைச்சர். இதுவரை யாரைப் பார்த்தும் எங்கள் தலைவர் எந்த விதத்திலும் பயந்தது கிடையாது. நாளை முதலமைச்சர் டிலிமிட்டேஷன் (தொகுதி மறுவரையறை) சார்பாக எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் திமுக கலந்து கொள்ளுமா? என்பதை எதிர்க்கட்சி தலைவர் கூற வேண்டும்” என்றார்.
அதற்கு உதயநிதி, “எப்போது தண்ணீர் வரும் என்று கேட்கிறேன். அதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கேட்கிறேன். அதற்கு பதிலளிக்காமல், சம்பந்தமே இல்லாமல் பேசி அமைச்சர் நிர்மல்குமார் விஷயத்தை திசை திருப்ப பார்க்கிறார்” என்று கூறினார்.
உடனே அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாட்டின் நலன் கருதி நாளை முதலமைச்சர் டிலிமிட்டேஷன் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எம்.பிக்கள் அனைவரும் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அழைப்பு விடுத்தார்.
“யாரைப் பார்த்தும் முதல்வர் விஜய்க்கு பயமில்லை..”-
— PttvOnlinenews (@PttvNewsX) August 7, 2026
அமைச்சர் நிர்மல் குமார் பேசியதும் கொந்தளித்த எதிர்க்கட்சிகள்#NirmalKumar | #TNAssembly | #TNGovt | #TNBudget2026 | #CMVijay | #TVK | #TNBudget | #UdhayanithiStalin | #DMK pic.twitter.com/3UVU6IehO7

