சென்னையில் புதிய ஆவின் பாலகங்கள் -அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்!!

 
tn

பால்வளத்துறை அமைச்சர் நாசர்  புதிய ஆவின் பாலகங்களை  சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலக வளாகம் மற்றும் அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட ஆவின் பாலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

“ஆவின்" எனும் வணிகப் பெயர் தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்படும் பெயராக விளங்குகிறது. ஆவின் நிறுவனம், கிராம காவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அவாவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.4 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 29 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

tn
ஆவின் விற்பனை அதிகரிக்கும் நோக்கிலும் மற்றும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்து பொதுமக்களுக்கும் எளிய வகையில் சென்றடைய பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஆவின் பாலகம் அமைத்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் 10000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 21 அதிநவீன பாலகங்கள், 18 பாலகங்கள், 3000 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 75 மொத்த விற்பனையானார்கள் மூலமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக 14.13 லட்சம் லிட்டர் பால் மற்றும் 25 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சில்லறை விற்பனையாளர்களை அதிக படுத்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள வைப்பு தொகையை குறைத்தும் மற்றும் வழிமுறைகளை எளிமையாக்கியும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் உடனடியாக உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tn

ஆவின் நிறுவனம் ஐந்து வகையான பால் மற்றும் பால் பொருட்களான நெய், வெண்ணை , பால்கோவா, மைசூர்பா மற்றும் ஐஸ்க்ரீம் தவிர தற்போது பன்னீர். குலோப் ஜாமுன், பால்பேடா, ரசகுல்லா, குக்கீஸ் போன்ற 82 வகையான பால் பொருட்களின் விற்பனையை, அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் நுகர்வோர்களின் தேவையை கருத்தில் கொண்டு புதியதாக ஐந்து வகையான பால் பொருட்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த  19.01.2022 அன்று விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.மேலும் இதனை தொடர்ந்து தற்போது பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஆவின் பாலகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

tn

இதன் ஒரு பகுதியாக தற்போது புதிய ஆவின் பாலகத்தை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள காய்நடை பராமரிப்பு துறை அலுவலக வளாகத்திலும் மற்றும் அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட ஆவின் பாலகத்தினை. மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  சா.மு.நாசர் நேற்று திறந்து வைத்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள பாலகமானது முற்றிலும் மறுசுழற்ச்சி அடிப்படையில் பயன்பாடற்ற இரும்பு தகடுகள் மற்றும் இதர பழைய பொருட்களை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும். மேலும் இனி வருங்காலங்களில் இது போன்ற பாலகங்கள் அமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.