ரூ.100 கோடியில் வெற்றி 150 நாள் திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு

 
as

ரூ.100 கோடியில் வெற்றி 150 நாள் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் 150 நாள் வேலைத்திட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் என்.ஆனந்த், “ரூ.100 கோடியில் வெற்றி 150 நாள் திட்டம் செயல்படுத்தப்படும். விபிஜி ராம் ஜி திட்டத்தில் 125 நாட்கள் நிறைவு செய்தவர்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை என மொத்தம் 150 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்துக்கு திருத்த வரவு, செலவு திட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விபிஜி ராம்ஜி திட்டத்தில் தமிழ்நாட்டில் என்ன வேலைகள் நடைபெற வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்க முடியாது.நாங்கள் எடுப்பதுதான் இங்கே முடிவு செய்வோம். கண்டிப்பாக ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். ஏழை மக்களுக்கு என்ன தேவையோ அதனை இந்த அரசு செய்யும். ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் ஊரகப் பகுதி மக்களுக்கு தேவையானதாக உள்ளது. 125 நாள் திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.5057 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே முதன்மைப் பணி” என்றார்.