"சர்க்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சி மீண்டும் வந்திருக்கும்" – பங்கமாக கலாய்த்த ஆனந்த்

 
"சர்க்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சி மீண்டும் வந்திருக்கும்" – பங்கமாக கலாய்த்த ஆனந்த் 

சர்க்கார் படத்தில் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால், நீங்கள்தான் திரும்ப வந்திருப்பீர்கள், அது கிழித்ததால்தான் நீங்கள் இன்று ஆட்சியில் இல்லை என அதிமுகவினரை நோக்கி அமைச்சர் என்.ஆனந்த் கூறினார்.

ச்



தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், எதிர்கட்சியினரைப் பார்த்து, "சர்க்கார் திரைப்படத்தின் பேனரைக் கிழிக்காமல் இருந்திருந்தால் நீங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பீர்கள்... அந்த ஒரே ஒரு பேனரைக் கிழித்ததால்தான் இன்று எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்" எனப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், "எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கள் தலைவர், தளபதிதான். அவர்தான் எங்கள் உயிர், மூச்சு, நாடி எல்லாமே!" என நெகிழ்ச்சியுடன் தனது உரையை நிறைவு செய்தார். இந்த கலாய்ப்பும், அதற்கு மற்ற உறுப்பினர்கள் சிரித்த விதமும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.