“பிரஸ்ஸை பார்த்து ஓடுகிறோமா?”- அமைச்சர் ஆனந்த் விளக்கம்

 
“பிரஸ்ஸை பார்த்து நான் ஓடுகிறோமா?”- அமைச்சர் ஆனந்த் விளக்கம்

 

அமைச்சர் அனந்த் கிடுகிடுகிடுன்னு ஓடுறாரு... அமைச்சர் ஆனந்த் பத்திரிகையாளர்களை கண்டாலே கிடுகிடுகிடுன்னு ஏன் ஓடுறாரு தெரில...ஜருகண்டி..ஜருகண்டி.. என திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர் சட்டப்பேரவையில் கலாய்த்தார்.



இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “பிரஸ்ஸை பார்த்து நான் ஓடுகிறேன் எனக் கூறுகிறார்கள். நீங்கள் உங்களுக்கென ஒரு நிறுவனம் வைத்து, இவர்களிடம் இப்படி கேளுங்கள் என சொல்லி எங்களிடம் கேட்க வைத்து ட்ரோல் செய்ய பார்க்கிறீர்கள். ‘என்ன நலத்திட்டத்தை செய்தீர்களோ அதை மட்டும் சொல்லுங்கள்’ என மைக்கை நீட்டுவார்கள். உடனே நீங்கள் சொல்லிக் கொடுத்த இரண்டு கேள்விகளை சொருகி விடுவார்கள். பிரஸ் எல்லாம் என்னுடைய நண்பர்கள்தான். ஆனால், அவர்கள் 75 வருடமாக அவர்கள் உங்களுடனேயே பழகிவிட்டார்கள். இப்போதுதான் எங்களுடன் பழகுகிறார்கள். தேவையில்லாததை பேசாமல், மக்களுக்கு வேண்டியதை முதல்வர் செய்ய சொல்லியுள்ளார். யாரையும் பார்த்து பயம் கிடையாது. தீர்வுதான் நோக்கம்,  முதலமைச்சர் யாருக்கும் படயப்பட மாட்டார்” என்றார்.