தமிழ்நாடு கஜானாவில் ஒன்றும் இல்லை - புஸ்ஸி ஆனந்த்
சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்களுடன் தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்லாம் நியாயமானது தான்.. போன ஆட்சியில கஜானாவையே காலி பண்ணிட்டு போய்ட்டாங்க.. தமிழ்நாட்டில் கஜானா மட்டும் தான் இருக்கிறது, கஜானாவில் ஒன்றும் இல்லை.…… இருந்தாலும் எங்களால் முடிந்தவரை உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதை பரீசிலித்து செய்வோம். எல்லாத்தையும் சரி செய்து, முதலமைச்சர் விஜய் உங்களுக்கு செய்து கொடுப்பார். உங்க எல்லாருக்கும் ஒரு சூத்திரம் தெரிஞ்சிடுச்சு. போராட்டம் பண்ணா மற்ற ஆட்சியில் ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா, தளபதிகிட்ட போனா செய்து தருவார்னு தெரிஞ்சுக்கிட்டீங்க” என்றார்.

