'ஏய் எரும மாடா நீ' மேடையில் ஒருமையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

 
'ஏய் எரும மாடா நீ' மேடையில் ஒருமையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பொது இடத்தில் தனது உதவியாளரை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரக்குறைவாக திட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் வேளாண்மை உணவு பதப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி மாநாடு கண்காட்சி மேடையில் உதவியாளரை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரக்குறைவாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் தமது உதவியாளரை நோக்கி ஒருமையில் பேசி “எங்கயா அவன்?, ஏய் எரும மாடா நீ? பேப்பர் எங்கே?” என கோபமாக திட்டினார். மேலும் உதவியாளர் வழங்கிய பேப்பரைத் தூக்கி எறிந்த அமைச்சர் ஆவேசமாக நடந்து கொண்டார்.


இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மேடையில் தனது உதவியாளரை சபை நாகரிகம் இல்லாமல் தரைக்குறைவாக திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.