வணிகவரி, பதிவுத்துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.28,116 கோடி வசூல்

 
moorthy

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 28,116 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

எனது மகனுக்கு திருமணம் நடந்ததாக தவறான தகவல்: அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம்  | minister moorthy - hindutamil.in

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிக வரி இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பதிவுத்துறை அரசு செயலர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தைத்  தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, வணிகவரித் துறையில் 24,528 கோடி ரூபாயும் பத்திர பதிவுத்துறையில் 3588 கோடி ரூபாயும் கூடுதல் வருவாயாக ஈட்டபட்டுள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் வருடத்தின் மொத்த வருவாய் 1,50,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி பத்திர மோசடி தொடர்பாக 16,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 2000-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி நிலுவை தொகையாக 5000 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. பத்திரப்பதிவு துறையில் இந்த ஆண்டு மட்டும் 32 லட்சம் பத்திரங்கள் பதியப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு 10 லட்சம் பத்திரங்கள் கூடுதலாக பதியப்பட்டுள்ளன” எனக் கூறினார்.