பிரதமர் மோடியால்தான் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட்- அமைச்சர் நெகிழ்ச்சி

 
மெய்யநாதன்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க நேரு அரங்கிற்கு வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து  செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

முன்னதாக வரவேற்புரையாற்றிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், “செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்துள்ள பிரதமர் மோடுய வரவேற்கிறேன். மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த முடிந்தது. ஒரு குடும்பமாக நாம் எல்லோரும் இங்கு ஒருங்கிணைந்துள்ளோம்” எனக் கூறினார்.