"உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்"

 
udhayanidhi stalin

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 6ம் வீதியில் நேற்று இரவு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு மூன்று கடைகள் தீக்கு இறையானது.‌ இந்த தீ விபத்து ஏற்பட்ட கடைகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கடையின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவித் தொகையை வழங்கினார்

Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) / Twitter

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெற உள்ளது, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று போடப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைக்கேற்ப ரஷ்யா டென்னிஸ் போட்டியில் அனுமதிக்கப்படுமா என்ற முடிவு எடுக்கப்படும், தமிழ்நாட்டில் 26 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் உள்ளது, இதில் பெரும்பான்மையான சங்கங்களில் பிரச்சனை ஏதுமில்லை, மூன்று அல்லது நான்கு சங்கங்களில் மட்டும் தான் பிரச்சனை உள்ளது அதையும் துறை அதிகாரிகள் அழைத்துப் பேசி வருகிறார்கள், சங்கங்களுக்குள் ஏற்படக்கூடிய குளறுபடிகள் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது விளையாட்டு வீரர்கள் தான்‌ என்பதை எடுத்துக் கூறி கடந்த ஆறு மாத காலத்தில் அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டி துறை அதிகாரிகள் தீர்வை ஏற்படுத்தி உள்ளனர் எந்த சங்கத்தில் பிரச்சனை உள்ளதோ அதை துறை அதிகாரிகள் பேசி சரி செய்வார்கள்.


தமிழகத்தில் 86 பேர் என்ஐஎஸ் பயிற்சி முடித்து விட்டு வேறு பணிகளுக்கு சென்று உள்ளனர். அவர்களில் யார் தகுதியான நபரோ அவர்களை விசிட்டிங் பயிற்சியாளர் என்ற முறையில் வருகின்ற மூன்று மாதத்திற்குள் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களிலும் பணி அமர்த்தப்படுவார்கள். திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது அதனால் அவர் அமைச்சராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம், இதற்கான உரிய முடிவை தமிழக முதலமைச்சர் எடுப்பார்” என்று தெரிவித்தார்.