"என்கவுன்டர், மாவுக்கட்டு சரியல்ல! அது சரியல்ல"- அமைச்சர் மரிய வில்சன்

 
"என்கவுன்டர், மாவுக்கட்டு சரியல்ல! அது சரியல்ல"- அமைச்சர் மரிய வில்சன் 

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்றால் உடனே என்கவுன்டர், மாவுக்கட்டு. அது சரியான முறை கிடையாது என அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், "கொளத்தூர் MLA V. S.பாபு....Recovery stage தான்... அவர் family யிடம் பேசிட்டு தான் இருக்கிறேன். God's grace அவர் சீக்கிரம் வந்துடுவார். சட்டம் ஒழுங்கு பிரச்சினையைப் பொறுத்த வரையில் திமுகவும் அதிமுகவும் நெகட்டிவ் செட்டிங் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்றால் உடனே என்கவுன்டர், மாவுக்கட்டு. அது சரியான முறை கிடையாது. நான் அதனை ஊக்குவிக்க மாட்டேன். குற்றங்களை கட்டுப்படுத்த ஆராய்ந்து பார்த்துத் தீர்வு காண வேண்டும். அப்போல்லாம் ஸ்கூல்ல முட்டி போட்டு அடி வாங்கியிருக்கேன்.. இப்போ அது மாதிரி கிடையாது.. குழந்தைகளுக்கு சின்ன வயசுலையே செல்போன கொடுத்துடுறாங்க" என்றார்.