#BREAKING மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடி! வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்

 
ச்

தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி என நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.


 

தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது. தமிழ்நாட்டின் உண்மையான கடன்  அளவு ரூ.13.18 லட்சம் கோடி. வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தைவிட அதிகரித்துள்ளது

வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்ச அளவாகும். அன்றாட நிர்வாக செயல்பாடுகளை சமாளிக்கவே கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். 60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது. 60 வருடங்களில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் ரூ.5லட்சம் கோடி. தி.மு.க ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் வாங்கிய கடன் மட்டும் ரூ.5லட்சம் கோடி.” என்றார்