“திட்டமிட்டு இஸ்லாமியரை அழிக்கிறது பாஜக” - அமைச்சர் மனோ தங்கராஜ்

 
mano mano

அரசியல் லாபத்திற்காக மத அடிப்படையில் பகையை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்தி, குடிமக்களை அரசே கொன்று குவிக்கும் அவலம் தான் சனாதனம் கற்பிக்கும் தர்மமா? என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனோ தங்கராஜ்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் என்கவுண்ட்டர்கள் அதிகரித்ததாக செய்திகள் வெளியாகின. கடந்த 8 ஆண்டுகளில் நடத்தப்பட்ட 14,973 என்கவுண்ட்டர்களில் 238 பேர் உயிரிழந்ததாகவும், 9,467 பேர் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டதாகவும் அம்மாநில டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா கூறியிருந்தார். இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “80% இந்துக்கள் வாழும் உத்திர பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 14,973 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கொல்லப்பட்டவர்களுள் 37% பேர் இஸ்லாமியர்கள் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. மேலும், காயமடைந்தோரில் 40% பேர் இஸ்லாமியர்கள். இது திட்டமிட்டு இஸ்லாமியரை அழித்தொழிக்க பாஜக அரசு மேற்கொள்ளும் கொலை வெறியாட்டமாக பார்க்கப்படுகிறது. இவர்களுள் எத்தனை பேர் உண்மை குற்றவாளிகள் என்பது கேள்விக்குறி!


மறுபுறம் குஜராத் கலவரத்தில் குற்றச்சாட்டிற்குள்ளானவர்கள் கூட பாஜகவால் மாலையிட்டு வணங்கப்பட்டனர். அரசியல் லாபத்திற்காக மத அடிப்படையில் பகையை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்தி, குடிமக்களை அரசே கொன்று குவிக்கும் அவலம் தான் சனாதனம் கற்பிக்கும் தர்மமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.