சனாதனம் குறித்து விளக்கம் அளிக்க பாஜகவினர் தயாரா?- அமைச்சர் மனோ தங்கராஜ்

 
அமைச்சர் மனோ தங்கராஜ்

சனாதனம் என்றால் என்ன? அது என்ன சொல்கிறது என்பது குறித்து விளக்க பாஜகவினர் தயாராக உள்ளனரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

சைதை சாதிக் விவகாரம்: ``மேடையிலேயே அவரைக் கண்டித்தேன்” - சொல்கிறார்  அமைச்சர் மனோ தங்கராஜ் | Mano thangaraj talks about saithai sadhik  conytroversy speech - Vikatan

இதுதொடர்பாக மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சனாதனம் என்றால் என்ன? அது என்ன சொல்கிறது என்பது குறித்து விளக்க பாஜகவினர் தயாராக உள்ளனரா?சனாதனம் குறித்து  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை. பாஜகவினர் ஹிட்லர் போன்று முசோலினி போன்று பொய்யையே திரும்ப திரும்ப கூறி, மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகின்றனர். அவர்களுக்கும் சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 


இந்து சமூகத்தை அவர்கள் நேசிக்கவும் இல்லை, அதை உயர்த்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கார்ப்பரேட்-ஐ வாழ வைக்கும் ஒரு கட்சி, வாக்கு வங்கிக்கு மட்டுமே மதத்தை பயன்படுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்” என பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடதக்கது.