டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை!

 
ma Subramanian ma Subramanian

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 

ஏடிஸ் எனப்படும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 20 முதல் 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

dengue

இந்த நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் சுகாதரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஆலோசனை நடத்துகிறார்.