தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு- மா.சு

 
ma su

தமிழகத்தில் இன்று நடைபெற்ற 18 வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

Image

அப்போது பேசிய அவர், “இன்று நடைப்பெற்ற 18-வது மெகா தடுப்பூசி முகாமில் 17,34,083 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் முதல் தவணையாக 57,1,795 பேருக்கும், இரண்டாம் தவணையாக 1162288 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 87.03% பேருக்கு முதல் தவணையும், 60.1% பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், அரியலூர், திருப்பூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், மற்றும் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 90% பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது.  வரும் 10 ம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் செயல்படும். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வரும் 10ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரக் கூடிய நபர்கள் தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் வரும் 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. அதன்படி, 2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தமிழகத்தில் இதுவரை 33 லட்சத்து 46,000 சிறார்கள் தடுப்பூசி கொண்டுள்ளனர். 5 நாட்களில் 67.25% சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.