தமிழகத்தில் வரும் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்;இலவசமாக பூஸ்டர் செலுத்திக் கொள்ளலாம்

 
vaccine camp

தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி 34-வது 50 மையங்களில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு  மருத்துவமனையில், இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், தமிழக சுகாதாரத்துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.  அப்போது, தமிழக சுகாதாரத்துறையின் திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமாரும் விளக்கினர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், “கருத்தடை வளையம் தமிழகத்தில் மிக சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளதற்காக 27.7 2020 அன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில்,  தேசிய அளவில் முதல் இடம் பிடித்து விருது பெறப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உருவான கருமுட்டை விவகாரம் தொடர்பான வழக்குகளில், சுகாதாரத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விதிமுறைக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி 34-வது 50 மையங்களில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்” எனக் கூறினார்.