“கலைஞர் குறித்து தரம் தாழ்ந்து பேசிவரும் இபிஎஸ் அரசியலில் இருந்து துடைத்தெரியப்படுவார்”- மா.சு.

 
eps masu

கலைஞர் குறித்து தரம் தாழ்ந்து பேசிவரும் எடப்பாடி பழனிச்சாமி அரசியலில் இருந்து துடைத்தெரியப்படுவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னிகாபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்தில் திமுகவிற்கு வாக்குகளை சேகரித்தார். இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 160 ஏக்கர் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு மீட்டெடுத்து சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் கிண்டியை சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் 22 லட்சம் பட்டா கொடுத்துள்ளார். கலைஞர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசியது குறித்து பதிலளித்த மா.சுப்பிரமணியன், அரசியலில் இப்படிபட்டவர்கள் எல்லாம் உள்ளார்களே என வருத்தப்படும் எடப்பாடி பழனிச்சாமி செயல்பாடு உள்ளது. கலைஞர் மக்களுக்காக பாடுபாட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும், கலைஞர் குறித்து எடப்பாடி பேசுவதற்கு அவரது நா கூச வேண்டும். அரசியலுக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. கலைஞர் குறித்து தரம் தாழ்ந்து பேசிவரும் எடப்பாடி பழனிச்சாமி அரசியலில் இருந்து துடைத்தெரியப்படுவார்” என தெரிவித்தார்.