“சட்டம் ஒழுங்கு எங்கு பிரச்னையாக உள்ளது என்பதை சொல்ல வேண்டும்”- அமைச்சர் மா.சு. ​​

 
ச் ச்

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சனங்களை புறம் தள்ளுகிறேன். கரூரில் 41 பேர் இறந்த போது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த அறிவாளிகள் எல்லாம் என்னை அறிவாளி இல்லையென பேசுவதெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை  எதிரில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இரண்டு பேருந்து நிழற்குடைகளை மக்கள் பயன்பாட்டிற்குத் அத்தொகுதியின் எம்எல்ஏவும், தமிழக சுகாதார துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், கலைஞர் மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் 3 ஆயிரம் 4 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தில் விரைவில் மிகப்பெரிய அளவில் குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தும், சென்னையிம் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் மருத்துவ பயன்பெற வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் இரண்டு பேருந்து நிறுத்தம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கிண்டி பேருந்து நிறுத்தம் 93 லட்சம் ரூபாயில் நவீனத்துவபடுத்தப்படவுள்ளது

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சனங்களை புறம் தள்ளுகிறேன். கரூரில் 41 பேர் இறந்த போது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த அறிவாளிகள் எல்லாம் என்னை அறிவாளி இல்லையென பேசுவதெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை. தமிழக பொருளாதாரத்தை உத்திரபிரதேசத்துடன் ஒப்பிடக் கூடாது என்று பா.சிதம்பரம் போன்ற பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். அவர்களின் பேட்டியை பார்த்து அன்புமணி தெரிந்து கொள்ளட்டும். சட்டம் ஒழுங்கு எங்கு பிரச்னையாக உள்ளது என்பதை சொல்ல வேண்டும். எடப்பாடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை சிந்தித்து பார்த்தால் இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பது தெரியும். சைதாப்பேட்டை இரும்பு மேம்பாலம் வரும் பிப்ரவரிக்குள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.