உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 
masu

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்து இருந்தது. இந்த நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு செய்யும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நீதிமன்ற தீர்ப்பால் 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களை நீதிமன்ற தீர்ப்பு பாதிக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசின் 69% இடஒதுக்கீடு முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தீர்ப்பால் தனியார், சிறுபான்மையின கல்லூரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என கூறினார்.