ஒரு மாதத்திற்குள் மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சு.

 
Ma subramanian

தமிழ்நாடு மருத்துவ துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுமார்  5000 பணியிடங்களுக்கு, எம்.ஆர்.பி. மூலம் தேர்வாகியுள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பணி ஆணைகள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Image


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிர்ணியன், “தமிழக மருத்துவத்துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுமார் 5,000 பணியிடங்களுக்கு, மெடிக்கல் சேர்விசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு மூலம் தேர்வாகி உள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். ஒரு மாதத்தில் எம்.ஆர்.பி மூலம் விரைவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். புதிய மருத்துவ பணியிடங்கள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் இந்த அறிவிப்பை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு புதிய மருத்துவ கல்லூரி வருவது தடைப்படும். தமிழ்நாட்டில் இன்னும் 6 மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. இன்று மாலைக்குள் செந்தில் பாலாஜிக்கு உள்ள நோய் பாதிப்பு & சிகிச்சை பற்றி தெரியவரும். புதிய மருத்துவ பணியிடங்கள் பற்றிய  தேசிய மருத்துவ ஆணைய அறிக்கை செயல்பாட்டிற்கு வந்தால், தமிழகத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வருவது தடைபடலாம்.

தமிழ்நாடு அரசு சார்பில் கலைனர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்டுவ மாநாடு ஜனவரி 19,20,21 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 23 மருத்துவ சிறப்பு பிரிவை சார்ந்த மருத்துவர்கள் கலநந்துகொள்கின்றனர். தேசிய அளவிலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்” எனக் கூறினார்.