போண்டா மணியிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ttn

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்  நடிகர் போண்டா மணியிடம் நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Bonda mani

 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் போண்டா மணி. சுந்தரா டிராவல்ஸ், வின்னர் ,திருமலை, குசேலன், படிக்காதவன் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளார் . குறிப்பாக வடிவேலுடன் இவர் நடித்த   காட்சிகள் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டது. அத்துடன் அதிமுக சார்பாக தேர்தல் சமயங்களில் பிரச்சாரத்திலும் இவர் ஈடுபட்டு வந்தார்.  

இந்த சூழலில் நடிகர் போண்டாமணி சிறுநீரக பாதிப்பால் தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பருவ காதல் என்ற படத்தில் சாக்கடையில் விழுவது போன்ற சீனுக்கு நிஜமாகவே குதித்ததால், சாக்கடை நீர்  அவரது  நுரையீரலை பாதித்ததாகவும், அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில்,  தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ள அவர்,  தனது சிகிச்சைக்கு தமிழக  அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
tn

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் நேரில் உடல்நலம் கேட்டறிந்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர்  நலம் விசாரித்தார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாசுபிரமணியன் இரண்டு கிட்னியும் செயலிழந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டாமணியின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.