மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் : ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

 
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் : ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..   மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் : ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..  

சென்னையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை காராணமாக, மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும்,  மேலும் வருகிற 25ம் தேதி ஒடிசா, மேற்குவங்கம் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காராணமாக தமிழகத்திலும் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே நேற்று சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக, நேற்று மாலை முதல் இரவு முழுவதுமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு இடி மின்னலுடன் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.  இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.  கனமழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,  இருந்தபோதிலும் சென்னை கண்ணகி நகர் பகுதியில்  மின்கம்பி அறுந்து அங்கு தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்துள்ளது.  

Ma Subramanian

இதனையறியாது அதிகாலை கண்ணகி நகர் பகுதியில்  பணியில் ஈடுபட்டிருத தூய்மை பணியாளர் வரலட்சுமி  மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சக தூய்மை பணியாளர்களிடையேவும், அப்பகுதி மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம்  இழப்பீடு வழங்கினார்.  அத்துடன் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.