பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ttn

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஒமிக்ரான் தொற்று  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கூடுதல் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதற்காக பூஸ்டர் டோஸ் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 9 மாத காலத்திற்கு பிறகு அதே வகை தடுப்பூசியை மேலும் ஒருமுறை  பூஸ்டர் டோஸ் என்று செலுத்திக் கொள்வதே பூஸ்டர் டோஸ் என்று அழைக்கிறோம். அந்த வகையில் இந்தியாவில் கடந்த திங்கட் கிழமையில் இருந்து பூஸ்டர் தோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Corona

தமிழகத்தைப் பொருத்தவரை பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள முன்கள பணியாளர்களும்,  60 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்தவகையில் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசியை  செலுத்தி கொண்டனர்.


இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதுகுறித்து அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏப்ரல் 7 ஆம் தேதி இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட நான் , ஒன்பது மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி பொட்டுகொள்ளலாம் என்ற விதிமுறைகளின்படி இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ளப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.