அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அவசர ஆலோசனை..

 
மா

சமஸ்கிருத உறுதிமொழி , மருத்துவக் கழிவுகளை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து  அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்களுடனும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் இன்று பிற்பகல் அவசர ஆலோசனை நடத்தினார்.  

கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது மாணவர்கள் வழக்கமாக ஏற்கும் ஹிப்போகிரடிக் உறுதிமொழியை ஏற்காமல், சமஸ்கிருத மொழியில்  உறுதிமொழியேற்றனர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து,  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  அவசர ஆலோசனை..

பின்னர் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் , ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சிலர் வெளியிட்டுள்ள ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழியைத்தான் நாங்கள் எடுத்து கொண்டோம் என்றும்,  சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை என்றும் மாணவர்கள் விளக்கமளித்த்தனர்.  மேலும் இந்த உறுதி மொழியைத்தான் ஏற்க வேண்டும் என எந்தக் கட்டுப்பாடும்  விதிக்கவில்லை என்று கூறிய அவர்கள்,  சரக் சபத் உறுதிமொழி சர்ச்சையானதை பின்னரே தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம்  ‘ஹிப்போகிரடிக்’ உறுதிமொழியைத்தான் ஏற்க வேண்டுன் என சுற்றறிக்கை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.  

அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  அவசர ஆலோசனை..

இந்த நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கம், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும்  டீன் ரத்தினவேல்  மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த விவகராம் குறித்து அமைச்சரின் உத்தரவின் பேரில் ம்ருத்துவப் பணிகள் இயக்குநர்  டாக்டர் நாராயணபாபு மதுரைக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.  இந்த நிலையில் அனைத்து மருத்துவக் கல்லூரி  டீன்களுக்கும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  அவசர ஆலோசனை..

சமஸ்கிருந்த உறுதிமொழி சர்ச்சை, மருத்துவக் கழிவுகளை கையாள்வது உளிட்ட விவகாரங்கள் குறுத்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கவே அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  இதில் முக்கிய உத்தரவுகள், விதிமுறைகள் , வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என தெரிகிறது.