அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி வருபவர் அமைச்சர் மா. சுப்பிரமணியன். இவர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேசமயம் உடல்நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர் நடைபயிற்சி, உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறார்.
இந்த சூழலில் இன்று வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . அங்கு அனுமதிக்கப்ட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நிலை குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.