பெண்களை அச்சுறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உள்ளது - அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பாதிக்கப்படும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாதிக்கப்படும் பெண்களை அச்சுறுத்தும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாலியல் புகார்களில் பெண்கள் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது துணிச்சலாக புகார் தருகிறார்கள், அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் அரசியலையும், போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

