சொத்து வரி உயர்வுக்கான காரணம் என்ன ? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

 
nehru

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை. சென்னையில் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது. காவிரியை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தடைபடாது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உடன் ஊரகப்பகுதிகள் இணைக்கப்படும் போதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எந்த விதத்திலும் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

 

சொத்து வரி உயர்வுக்கான காரணம் குறித்து பேசிய அவர், 2018-60 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக, ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதற்காகவே வரி உயர்த்தப்பட்டது என்று ஏற்கனவே அரசு விளக்கம் அளித்துள்ளது.  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.