'மனம் விட்டு நானும் சிவாவும் பேசினோம்'- அமைச்சர் கே.என்.நேரு

 
nehru

அமைச்சர் கே.என். நேரு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். 

KN Nerhu

திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் இடையே முரண் நிலவி வந்தது.  அதனை சரி செய்யும் வகையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு திருச்சி சிவாவை நேரில் சந்திக்க அவருடைய இல்லத்திற்கு வந்தார். அவரை சந்தித்த பின்பு அமைச்சர் நேருவும் திருச்சி சிவாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி மாநகரம் ராஜா காலணி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றேன். அப்போது சிலர் திருச்சி சிவா பெயரை நிகழ்ச்சியில் போடவில்லை என கேட்டார்கள், அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தான் கேட்க வேண்டும் என கூறிவிட்டு சென்று விட்டேன்.  அப்போது நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு சம்பவம் நடந்த போது தெரியாது, தஞ்சை மாவட்டத்திற்கு சென்ற பின்னர் தான் இது போன்ற சம்பவம் நடந்து விட்டதாக தெரிவித்தனர். திருச்சி சிவா வெளிநாட்டில் இருந்ததால் communication gap காரணமாக இது நிகழ்ந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் என்னிடம் கேட்டார். எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என நான் அவரிடம் தெரிவித்தேன்.

திருச்சி சிவாவை நேரில் சென்று சமாதானம் செய்யுங்கள், அப்பொழுது தான் மக்கள் உங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என நம்புவார்கள். பிரச்சனை இல்லை என மக்களுக்கு சொல்லுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதனடிப்படையில் நான் சிவாவை சந்தித்தேன். இனி இது போல் எப்பொழுதும் நடக்காது. நாங்கள் இருவரும் எங்கள் மனதில் இருந்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்” என்றார்.