விஜய்யை அரசியல்வாதியாகவே அங்கீகாரம் செய்யவில்லை- அமைச்சர் ராமச்சந்திரன்

 
KKSSR Ramachandran KKSSR Ramachandran

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “சினிமா ரசிகர்களை வைத்துக்கொண்டு அவர் இப்படி பேசுவது நாகரிகமாக இல்லை. தவெக தலைவர் விஜய்யை ஒரு அரசியல்வாதியாக திமுக அங்கீகாரம் செய்யவில்லை. வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசும் விஜய் அந்த பகுதிக்கு நேரில் சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தாரா? புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், திருமண மண்டபத்தில் உதவிகளை செய்வது தான் விஜய்யின் அரசியல்” என்றார்.