சீட் கிடைக்காதுல்ல.. அப்பறம் எதுக்கு வேலை செய்யணும்? வெளியில் தலைகாட்டாத ‘துறை அமைச்சர்’

 
KKSSR KKSSR

வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ள KKSSR ராமச்சந்திரன் மழை வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் சுணக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு கிராமங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ள KKSSR ராமச்சந்திரன் மழை வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் சுணக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர், துணை முதலமைச்சர் சுழன்று சுழன்று பணியாற்றும் நிலையில், அமைச்சர் ஆர்வம் காட்டவில்லை. வரும் தேர்தலில் KKSSR ராமச்சந்திரனுக்கு சீட் கொடுக்க திமுக தலைமை தயாராக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீட் கிடைக்காது என தெரிந்தே அவர் மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

பெண்கள் காது மற்றும் கழுத்தில் நகைகள் அணிந்து வந்தால் மகளிர் உரிமைத் தொகை எப்படி கிடைக்கும்? மகளிர் உரிமைத் தொகையை வழங்கிவிட்டு அரசு படாதபாடு படுகிறது. ஆயிரம் ரூபாய் வாங்காத பெண்களிடம் இருந்து தப்பிப்பது பெரும்பாடாக உள்ளதாக கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.