திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு குற்றச்சாட்டு.. 3.3 லட்சம் கோடி முதலீடு யாரால் பறிபோனது..?

 
1

விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:

கடந்த ஆட்சியில் 23 சதவீதம், 24 சதவீதம் கமிஷன் தனியாக வாங்கி வைத்து விட்டு தான், அடுத்த வேலையே நகரும். இன்றைக்கு ஜீரோ கரப்ஷன் மாடல் கொண்டு வந்தவர்கள் நாம். அவர்கள் நம்மை பற்றி கேள்வி கேட்கிறார்களா? 50 ஆண்டு சாம்ராஜ்ஜியத்தை 30 நாட்களில் அழித்து காண்பித்து இருக்கிறோம். இந்த டெண்டர் மாபியாவை அழித்து காண்பித்து இருக்கிறோம். இன்னொரு விஷயம் சொல்கிறார்கள், ரீல்ஸ் ஆட்சி என்று சொல்கின்றனர். ரீல்ஸ் வாயிலாக இன்வெஸ்ட்மென்ட் வீடியோ போட்டேன். அதுக்கு பயங்கரமாக கலாய்த்தனர்.

நீங்கள் மக்கள் வரி பணத்தில் குடும்பம் குடும்பமாக பயணம் செய்தீர்களே? அப்பொழுது உங்களுக்கு தெரியவில்லையா? கடந்த 5 ஆண்டு ஆட்சியில் கமிஷன் கேட்டதால், தொழில் தொடங்க வந்த 25 நிறுவனங்கள் வேறு மாநிலம் சென்று விட்டன. தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.3.3 லட்சம் கோடி முதலீடும், 2 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் பறிபோய் விட்டன. இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா பேசினார்.