“நான் உங்க வீட்டு பிள்ள மா... நீங்க தான் MLA, நீங்க தான் மினிஸ்டர்”- அடிச்சிவிட்ட அமைச்சர் கீர்த்தனா
சிவகாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் “நான் உங்க வீட்டு பிள்ள மா... நீங்க தான் MLA, நீங்க தான் மினிஸ்டர்” என அமைச்சர் கீர்த்தனா உருக்கமாக உரையாற்றினார்.

சிவகாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, “பெரிய பொறுப்பை என் கையில் கொடுத்து இருக்குறீர்கள். அதற்கு ரொம்பவே கடமை பட்டிருக்கிறேன். அந்த கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். 24 மணிநேரமும் MLA அலுவலகம் திறந்து இருக்கும். அமைச்சர் ஆகிவிட்டார், சென்னையில்தான் இருப்பார் என்று நினைக்காதீர்கள். இன்னும் நான் உங்கள் வீட்டு பிள்ளைதான். நீங்கள் இல்லை என்றால் நான் MLA-வும் கிடையாது, அமைச்சரும் கிடையாது. நான் வெற்றிபெற்றால் நீங்கள் வெற்றிபெற்ற மாதிரிதான். நீங்கள்தான் MLA, நீங்கள்தான் அமைச்சர். 5 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம் கொண்டு வர முடியுமோ அத்தனை மாற்றங்களையும் கொண்டு வருவோம்” என்றார்

