தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் கீர்த்தனா..!
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமூக வலைதளத்தில் பகிர்ந்து வீடியோவில் கூறியிருப்பதாவது: தமிழகம் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கவில்லை.அதனை உருவாக்கி வருகிறது. தொழில் தொடங்க விரைவான அனுமதிகள் முதல் செயற்கை நுண்ணறிவு, பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தித் துறைகள் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் வரை புதுமைகள் கொண்ட ஒரு உள்கட்டமைப்பை தமிழகம் உருவாக்கி வருகிறது.
முதல்வர் விஜயின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் புதுமைகளின் மையமாகத் திகழச் செய்ய நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.எதிர்காலம் இங்கேயே உள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள். இவ்வாறு கீர்த்தனா கூறியுள்ளார். அவர் ரீல்ஸ் வீடியோவில், "தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும்" என முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
Tamil Nadu is not waiting for the future, we are building it.
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) May 27, 2026
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the… pic.twitter.com/d0Ipoc4BVR

