ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி நிறைவு விழா - அமைச்சர் பங்கேற்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிறைவு விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு நினைவு பரிசுகள் வழங்கினார்.
சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO- 2024) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் (26.01.2024) அன்று தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் நிறைவு விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிறைவு விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ், அவர்கள் நினைவு பரிசுகள் வழங்கினார்.#CMMKSTALIN | #TNDIPR |@mkstalin pic.twitter.com/cLheUzBY73
— TN DIPR (@TNDIPRNEWS) January 27, 2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை ( TN BEAT EXPO-2024) சென்னை வர்த்தக மையத்தில் 26.01.2024 மற்றும் 27.01.2024 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000 -க்கும் மேற்பட்ட பொருட்களை 420 அரங்குகளில், காட்சிப்படுத்தப்பட்டு 25,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும், இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் குறு, சிறு தொழிலாளர்கள் சுயஉதவி தொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியதில் நற்பயனைப் பெற்றதாக தெரிவித்தனர்.