2022-2023 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான ஊக்கத்தொகை - அமைச்சர் கயல்விழி வழங்கினார்!

 
minister

சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் கூட்ட அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார். 

சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் கூட்ட அரங்கத்தில் இன்று (08.03.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் வெளியிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் திருமதி க.லட்சுமி பிரியா இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் 11 நபர்களை தேர்வு செய்து அவர்களின் படைப்புகளை நூல்களாக வெளியீடு செய்வதற்கு முதல் தவனை நிதி உதவியாக தலா ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூ.5,50,000/- காசோலையாக வழங்கப்பட்டது.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறித்த ஆய்வுகளுக்கு உதவிடவும். இச்சமுகங்கள் தொடர்பான கலை, பண்பாடு. கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் சிறந்த எழுத்தாளர்களின் தமிழ் படைப்புகள் உலக அளவில் வசிக்கும் மக்களை சென்று அடைந்திடும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் என 2023-2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள் அதன்படி 4 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.


மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையில் காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நல இயக்குநர் திரு. த.ஆனந்த் இ.ஆ.ப., பழங்குடியினர் நல இயக்குநர் திரு. ச.அண்ணாதுரை ம.தொ.ப., மற்றும் எழுத்தாளர்கள் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.