ஆதிதிராவிடர் நலத்துறையில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் - அமைச்சர் வழங்கினார்

 
minister

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் இன்று 19.09.2023 சென்னை, சேப்பாக்கம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார்.


மேலும் கரூர் வைஸ்யா வங்கி சமூகப்பங்களிப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மின்நூலகம் (Digital Library) அமைப்பதற்காக ரூ.28.00 இலட்சம் மதிப்புள்ள 30 கணினிகள் கரூர் வைஸ்யா வங்கி மூலம் வழங்கப்பட்டது. மின்நூலகத்திற்கான கணினிகளை கரூர் வைஸ்யா வங்கியின் இன்ஸ்ட்டியூசனல் பிசினஸ் ஹெட் திருமதி எல்.எஸ்.ஜனனி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் ஒப்படைத்தார். முதற்கட்டமாக கரூர் வைஸ்யா வங்கி மூலம் வழங்கப்பட்ட மின் நூலகங்களுக்கான 5 கணினிகளை சென்னை வேப்பேரி, ராயபுரம், சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி மாணவியர் விடுதிகளின் காப்பாளினிகளிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒப்படைத்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.