ஓஹோ இதுதான் சொல்வதை தான் செய்வோம்! என்பதா? ஜெயக்குமார் கிண்டல்!

 

ஓஹோ இதுதான் சொல்வதை தான் செய்வோம்! என்பதா? ஜெயக்குமார் கிண்டல்!

மீனவர்களுக்கான நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக 1.72 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000- வீதம் அளிக்க தமிழக அரசு ரூ. 86.00 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் கிழக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் என சுமார் 1,72,000 பயனாளிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓஹோ இதுதான் சொல்வதை தான் செய்வோம்! என்பதா? ஜெயக்குமார் கிண்டல்!

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா உங்க ஆசிகாலத்தில் மீனவ மக்களின் துயர்துடைக்க பல திட்டங்கள் வழங்கப்பட்டது… காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் மீனவமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே அந்த நிலையை போக்கியது மாண்புமிகு அம்மாவின் அரசு.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.500 ஐ புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2017ல் ரூ.5,000 என உயர்த்தி 1.63லட்ச மீனவ குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.#திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது ரூ.8,000 தற்போது கொடுப்பதாக இருப்பது ரூ.5,000/- மட்டுமே. ஓஹோ இதுதான் சொல்வதை தான் செய்வோம்! என்பதா? ” என்று பதிவிட்டுள்ளார்.